விசுவ ஹிந்து பரிஷத் தங்களை அன்புடன் வரவேற்கிறது
Saturday, April 16, 2022
Tuesday, April 5, 2022
தமிழ் முற்றம் நிகழ்ச்சி 02.04.2022
ஆறாம் தமிழ்ச்சங்கமாம் தமிழ் முற்றம் எனும் அமைப்பை நிறுவி, தமிழ் அறிஞர்கள்
தமிழாய்ந்து மொழி வளர்க்க உற்ற துணையாக விளங்கும் மகா கனம் பொருந்திய மானனீய ஸ்ரீ வேதாந்தம் ஜீ அவர்களின் 90 வது பிறந்த நாள் விழா 02.04.2022 மாலை 3 மணியளவில் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பொன்கி. பெருமாள் அவர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தார். விழா நவரசங்களுடன் பொலிவுற்றது. ஆம். பட்டிமன்றம், பரதநாட்டியம், இனிய பாடல்கள், அருமையான உரைகள், வாழ்த்து மடல்கள், இனிய நினைவுகள் என்று நிகழ்ச்சி வெகுவாக களைகட்டியது.
வேதாந்தம் ஜீ யின் சேவைகளை சபையோர் உளமார பாராட்டிப் பேசினார். சிறப்பு விருந்தினர்களும், இந்து வித்யாலயா பள்ளி ஆசிரியர்களும் , ஐயாஅவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மலர்மாலை சூட்டி, மலர் மகுடம் அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழ் நெறிக் காவலர் மற்றும் சமஸ்கிருத சிரோன்மணி போன்ற பட்டங்களையும் அளித்து சிறப்பித்தனர்.
மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அன்பர்களுக்கு விருதுகள் வழங்கியும் நினைவுப் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தார். ஐயா அவர்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தமிழ் மொழியையும், நம் பாரதப் பண்பாட்டையும் உலகெங்கும் கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும் என்று தமிழ் முற்றத்தின் சார்பாக அனைவரும் வேண்டுகிறோம்.
ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏